யாழ்ப்பாணம் மாசற்ற மாநகரம்

இலங்கைத் தீவில் குடாநாட்டின் தென்மேற்குப் பகுதியில் கடல் நீரேரியைப் பார்த்தபடி அமைந்துள்ளது யாழ்ப்பாணம் மாநகரம். 1620 களில் யாழ்ப்பாண இராச்சியம் போத்துக்கேயரிடம் வீழ்ந்தபின்னர் தற்போதுள்ள இடத்தில் இந்த நகரம் உருவாக்கப்பட்டதாக வரலாற்றுக் குறிப்புக்கள் வெளிப்படுத்துகின்றன. அவ்வகையில் தற்போது 400 ஆண்டுகளைக் கடந்தும் இயற்கையோடு இசைந்துவாழும் மக்களின் உறைவிடமாக இந்நகரம் இன்னும் விளங்குகின்றது. இந்நகரினை முறையான கழிவு முகாமைத்துவம், இயற்கைச் சூழற்தொகுதிகளை (நீர், மண், காற்று) மாசற்றதாகப் பேணுதல், மீள்புதுப்பிக்கக் கூடிய சக்திமுதல்களின் பாவனையை அதிகரித்தல் போன்ற விடயங்களை உள்ளடக்கிய ஒரு முதன்மை நகரமாகக் கட்டியமைப்பதற்கான தொலைநோக்கினை உருவாக்குவதே எமது பணியாகும்.

பொறுப்பான உற்பத்தி மற்றும் நுகர்வு

நிலத்தில் வாழும் உயிர்கள்

மலிவானதும் மாசற்றதுமான சக்தி

நீரின் கீழ் வாழும் உயிர்கள்

சுவடி நிறுவகம்

புத்தாக்கம், ஆய்வு மற்றும் உரையாடலுக்கான ஆற்றலை மேம்படுத்துவதன் மூலம் இன்று நாம் எதிர்நோக்கும் சுகநல, சமூக, பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகளை உள்ளூரிற் கண்டறிவதைச் சாத்தியமாக்குவதே நமது நிறுவகத்தின் இலக்காகும். 2021 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் உள்ளூர் முயற்சிகளுக்கான கனேடிய நிதியம் The Canada Fund for Local Initiatives (CFLI) மற்றும் கொம்டுயிட் கனடா ஆகிய நிறுவனங்களின் நிதிஅனுசரணையில் யாழ்ப்பாணம் மாசற்ற மாநகரம் செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. ஒருவருடமாகத் தொடர்ந்த பல்வேறு பணிகளின் காரணமாக துறைசார் நிபுணர்கள், பொதுமக்கள் மற்றும் இளம் செயற்பாட்டாளர்களை உள்ளடக்கிய "யாழ்ப்பாணம் மாசற்ற மாநகரம்" எண்ணிம சமூகம் பத்தாம் திகதி செப்டம்பர், 2022 அன்று கோண்டாவிலில் உள்ள எழுதிரளில் இடம்பெற்ற செயற்பாட்டாளர் ஒன்றுகூடலில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.